Friday, August 23, 2013

அரசி வேடத்தில் அனுஷ்கா

அரசி வேடத்தில் நடிக்கும் அனுஷ்காவுக்கு ரூ.5 கோடிக்கு நகைகள் வாங்கப்பட்டன


8f9d62c8-8a29-48e8-a171-26f2e6db30ef_S_secvpf

தமிழ் தெலுங்கில் தயாராகும் ‘ருத்ரமாதேவி’ படத்தில் நடிக்கும் அனுஷ்காவுக்கு ரூ.5 கோடிக்கு ஒரிஜினல் தங்க, வைர நகைகள் வாங்கப்பட்டு உள்ளது.
‘ருத்ரமா தேவி’ அரசியின் வரலாற்றை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கின்றனர். இதில் அனுஷ்கா ருத்ரமாதேவி ராணி கேரக்டரில் வருகிறார். ராணா, பிரகாஷ் ராஜ் போன்றோரும் நடிக்கின்றனர். ரூ.40 கோடி செலவில் இப்படம் எடுக்கப்படுகிறது.
இதில் நடிப்பதற்காக அனுஷ்கா குதிரையேற்றம் யானை சவாரி பயிற்சிகள் பெற்றார். வாள் சண்டையும் கற்றார். ஏற்கனவே ‘அருந்ததி’ படத்தில் அரசி வேடத்தில் நடித்துள்ளார். எனவேதான் ‘ருத்ரமாதேவி’ படவாய்ப்பு அவருக்கு கிட்டியது. 3டியில் உருவாகிறது.
இந்த படத்தில் அனுஷ்கா அணிந்து கொண்டு நடிப்பதற்காக ஒரிஜினல் தங்க, வைர நகைகளை விலைக்கு வாங்கியுள்ளனர். ரூ.5 கோடி மதிப்பிலான நகைகளை அணிந்து நடித்து வருகிறார். இதுவரை வேறு எந்த இந்திய மொழிப் படங்களுக்கும் படப்பிடிப்புக்காக இவ்வளவு செலவில் நகைகள் வாங்கப்பட்டது இல்லை. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்

  • நம் கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களை சரிசெய்வதற்கு இஞ்சினியர்தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பைசா செலவில்லாமல், என்ன சிக்கல் ன்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம். கம்ப்யூட்டரில் அடிக்கடி தோன்றும் சிக்கல்களுக்கான அறிகுறிகளும், அவற்றுக்கான காரணங்களும்…

  • திரையில் எதுவும் தெரியவில்லை:
ஹார்டு டிஸ்க் தவறாக இணைக்கப்பட்டுள்ளது. அதை சரியாக பொருத்த வேண்டும்.

  • முக்கியமான பவர் விளக்கு எரியவில்லை:
1. முக்கியமாக பவர்கார்டை சரிபார்க்கவேண்டும்.
2. எஸ்.எம்.பி.எஸ்., சோதிக்கவும்.
3. மதர்போர்டு இணைப்பை சரிபார்க்கவும்.

  • திரையில் படங்கள் அலை அலையாய் நடனமாடுதல்:
1.டிஸ்பிளே கார்டு இணைப்பை சரிபார்க்கவும்.
2.வைரஸ் புகுந்துள்ளதா என பார்க்கவும்.
3.வீடியோ மெமரி கூட இந்த சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்.

  • திரை அதிருதல்:
மின்சார எர்த் கசிவு காரணமாக இருக்கலாம். காந்தப் பொருள் அருகில் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். (நீங்கள் கம்ப்யூட்டருக்கு அருகில் வைத்திருக்கும் ஸ்பீக்கர் பாக்ஸ் இதற்க்கு காரணமாக இருக்கலாம்).

  • செயல்படும்போது ஹார்டு டிஸ்க் சத்தமிடுதல்:
1.முறையற்ற பவர் சப்ளை.
2.கேபிள்கள் மற்றும் பிளக்குகள் சரியாக செருகப்பட்டுள்தா என்பதை பார்க்கவும்.
3.ஹார்டு டிஸ்க்கிற்கு Y கனெக்டர்களை பயன்படுத்த வேண்டாம்.
  • மானிட்டர் விளக்கு மினுமினுத்தல்:
மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள்கள், ராம், டிஸ்பிளே கார்டு, மற்றும் சி.பி.யூ இணைப்புகள் சரியில்லை என்றால் இது தோன்றும். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கவும்.

  • மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள்:
ராம் இணைப்பில் சிக்கல் உள்ளது. சி.பி.யூ திறந்து ராம்(RAM) சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும். 

  • மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள் (1 ஒலி நீளமாக, மற்ற இரண்டும் சிறியதாக):
உங்கள் டிஸ்பிளே கார்டு இணைப்பில் சிக்கல் உள்ளது. முதலில் அதை கவனிக்கவும்.

  • மூன்று நீளமான பீப் ஒலிகள்:
பயாஸ் அல்லது ராம்-இல் சிக்கல் உள்ளது.

  • நிற்காமல் தொடர்ச்சியாக பீப் ஒலிகள்:
விசைப் பலகை (கீ போர்டு) சிக்கல். சில நேரம் விசைப்பலகையில் உள்ள முக்கியமான கீ-கள் தொடர்ந்து அழுத்தப்பட்டிருக்கும். இதனால் இந்த சிக்கல் ஏற்படும்.

  • பிளாப்பி டிரைவுக்கான இடத்தில் உள்ள விளக்கு தொடந்து மினுக்குதல்:
டேட்டா கேபிள் (முறுக்கிய கேபிள்) சரியாக பொருத்தப்படவில்லை.

தமிழ் கம்ப்யூட்டர் தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் 8 மிகவும் பாதுகாப்பானது

விண்டோஸ் இயங்குதளங்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. சிறப்புகுரிய விண்டோஸ் இயங்குதளங்கள் என்றால் அது விண்டோஸ் எக்ஸ்பி, ஏழு மற்றும் எட்டு போன்றவைகளை மட்டும்தான் குறிப்பிட முடியும். இந்த விண்டோஸ் 8 இயங்குதளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக அடங்கியுள்ளது. 

விண்டோஸ் 8 இயங்குதளம் விண்டோஸ் ஏழு இயங்குதளத்தை விட 7 மடங்கும், விண்டோஸ் எக்ஸ்பியினை விட 21 மடங்கும் பாதுகாப்புடையதாகும், என மைக்ரோசாப்ட் நிறுவனமே கூறியுள்ளது.

இயங்குதளங்களை பாதுகாக்கவும், இயங்குதளங்களில் ஏற்படும் கோளாருகளை சரி செய்யவும் அவ்வபோது அப்டேட்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடும். அவ்வாறு இருந்தும் இயங்குதளத்தில் வைரஸ் பாதிப்புகள் ஏற்படும். மேலும் இணைய உதவியுடன் கணினியில் உள்ள தகவல்களை ஹேக்கர்கள் திருடவும் வாய்ப்புண்டு ஆனால் இந்த விண்டோஸ் 8 இயங்குதளம் அவ்வாறு இல்லை, மேலும் மிகவும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் இந்த இயங்குதளத்தில் அடங்கியுள்ளது.