Friday, August 23, 2013

அரசி வேடத்தில் அனுஷ்கா

அரசி வேடத்தில் நடிக்கும் அனுஷ்காவுக்கு ரூ.5 கோடிக்கு நகைகள் வாங்கப்பட்டன


8f9d62c8-8a29-48e8-a171-26f2e6db30ef_S_secvpf

தமிழ் தெலுங்கில் தயாராகும் ‘ருத்ரமாதேவி’ படத்தில் நடிக்கும் அனுஷ்காவுக்கு ரூ.5 கோடிக்கு ஒரிஜினல் தங்க, வைர நகைகள் வாங்கப்பட்டு உள்ளது.
‘ருத்ரமா தேவி’ அரசியின் வரலாற்றை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கின்றனர். இதில் அனுஷ்கா ருத்ரமாதேவி ராணி கேரக்டரில் வருகிறார். ராணா, பிரகாஷ் ராஜ் போன்றோரும் நடிக்கின்றனர். ரூ.40 கோடி செலவில் இப்படம் எடுக்கப்படுகிறது.
இதில் நடிப்பதற்காக அனுஷ்கா குதிரையேற்றம் யானை சவாரி பயிற்சிகள் பெற்றார். வாள் சண்டையும் கற்றார். ஏற்கனவே ‘அருந்ததி’ படத்தில் அரசி வேடத்தில் நடித்துள்ளார். எனவேதான் ‘ருத்ரமாதேவி’ படவாய்ப்பு அவருக்கு கிட்டியது. 3டியில் உருவாகிறது.
இந்த படத்தில் அனுஷ்கா அணிந்து கொண்டு நடிப்பதற்காக ஒரிஜினல் தங்க, வைர நகைகளை விலைக்கு வாங்கியுள்ளனர். ரூ.5 கோடி மதிப்பிலான நகைகளை அணிந்து நடித்து வருகிறார். இதுவரை வேறு எந்த இந்திய மொழிப் படங்களுக்கும் படப்பிடிப்புக்காக இவ்வளவு செலவில் நகைகள் வாங்கப்பட்டது இல்லை. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்

  • நம் கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களை சரிசெய்வதற்கு இஞ்சினியர்தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பைசா செலவில்லாமல், என்ன சிக்கல் ன்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம். கம்ப்யூட்டரில் அடிக்கடி தோன்றும் சிக்கல்களுக்கான அறிகுறிகளும், அவற்றுக்கான காரணங்களும்…

  • திரையில் எதுவும் தெரியவில்லை:
ஹார்டு டிஸ்க் தவறாக இணைக்கப்பட்டுள்ளது. அதை சரியாக பொருத்த வேண்டும்.

  • முக்கியமான பவர் விளக்கு எரியவில்லை:
1. முக்கியமாக பவர்கார்டை சரிபார்க்கவேண்டும்.
2. எஸ்.எம்.பி.எஸ்., சோதிக்கவும்.
3. மதர்போர்டு இணைப்பை சரிபார்க்கவும்.

  • திரையில் படங்கள் அலை அலையாய் நடனமாடுதல்:
1.டிஸ்பிளே கார்டு இணைப்பை சரிபார்க்கவும்.
2.வைரஸ் புகுந்துள்ளதா என பார்க்கவும்.
3.வீடியோ மெமரி கூட இந்த சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்.

  • திரை அதிருதல்:
மின்சார எர்த் கசிவு காரணமாக இருக்கலாம். காந்தப் பொருள் அருகில் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். (நீங்கள் கம்ப்யூட்டருக்கு அருகில் வைத்திருக்கும் ஸ்பீக்கர் பாக்ஸ் இதற்க்கு காரணமாக இருக்கலாம்).

  • செயல்படும்போது ஹார்டு டிஸ்க் சத்தமிடுதல்:
1.முறையற்ற பவர் சப்ளை.
2.கேபிள்கள் மற்றும் பிளக்குகள் சரியாக செருகப்பட்டுள்தா என்பதை பார்க்கவும்.
3.ஹார்டு டிஸ்க்கிற்கு Y கனெக்டர்களை பயன்படுத்த வேண்டாம்.
  • மானிட்டர் விளக்கு மினுமினுத்தல்:
மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள்கள், ராம், டிஸ்பிளே கார்டு, மற்றும் சி.பி.யூ இணைப்புகள் சரியில்லை என்றால் இது தோன்றும். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கவும்.

  • மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள்:
ராம் இணைப்பில் சிக்கல் உள்ளது. சி.பி.யூ திறந்து ராம்(RAM) சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும். 

  • மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள் (1 ஒலி நீளமாக, மற்ற இரண்டும் சிறியதாக):
உங்கள் டிஸ்பிளே கார்டு இணைப்பில் சிக்கல் உள்ளது. முதலில் அதை கவனிக்கவும்.

  • மூன்று நீளமான பீப் ஒலிகள்:
பயாஸ் அல்லது ராம்-இல் சிக்கல் உள்ளது.

  • நிற்காமல் தொடர்ச்சியாக பீப் ஒலிகள்:
விசைப் பலகை (கீ போர்டு) சிக்கல். சில நேரம் விசைப்பலகையில் உள்ள முக்கியமான கீ-கள் தொடர்ந்து அழுத்தப்பட்டிருக்கும். இதனால் இந்த சிக்கல் ஏற்படும்.

  • பிளாப்பி டிரைவுக்கான இடத்தில் உள்ள விளக்கு தொடந்து மினுக்குதல்:
டேட்டா கேபிள் (முறுக்கிய கேபிள்) சரியாக பொருத்தப்படவில்லை.

தமிழ் கம்ப்யூட்டர் தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் 8 மிகவும் பாதுகாப்பானது

விண்டோஸ் இயங்குதளங்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. சிறப்புகுரிய விண்டோஸ் இயங்குதளங்கள் என்றால் அது விண்டோஸ் எக்ஸ்பி, ஏழு மற்றும் எட்டு போன்றவைகளை மட்டும்தான் குறிப்பிட முடியும். இந்த விண்டோஸ் 8 இயங்குதளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக அடங்கியுள்ளது. 

விண்டோஸ் 8 இயங்குதளம் விண்டோஸ் ஏழு இயங்குதளத்தை விட 7 மடங்கும், விண்டோஸ் எக்ஸ்பியினை விட 21 மடங்கும் பாதுகாப்புடையதாகும், என மைக்ரோசாப்ட் நிறுவனமே கூறியுள்ளது.

இயங்குதளங்களை பாதுகாக்கவும், இயங்குதளங்களில் ஏற்படும் கோளாருகளை சரி செய்யவும் அவ்வபோது அப்டேட்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடும். அவ்வாறு இருந்தும் இயங்குதளத்தில் வைரஸ் பாதிப்புகள் ஏற்படும். மேலும் இணைய உதவியுடன் கணினியில் உள்ள தகவல்களை ஹேக்கர்கள் திருடவும் வாய்ப்புண்டு ஆனால் இந்த விண்டோஸ் 8 இயங்குதளம் அவ்வாறு இல்லை, மேலும் மிகவும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் இந்த இயங்குதளத்தில் அடங்கியுள்ளது.

Wednesday, August 21, 2013

இணையம் மூலம் பணம் சம்பாதிக்க!

இணையம் மூலம் பணம் சம்பாதிக்க!
[*]
வீட்டிலிருந்தே தினம் ரூபாய் ஆயிரம்
பணம் சம்பாதிக்கலாம் வாங்க!


இணைய உலகின் முதன்மையான தமிழ் ன்லைன் ஜாப் தளமான படுகை.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. :ros:

பணம் பணம் எதற்கெடுத்தாலும் பணம். அந்த பணத்தை நிறைவாக சம்பாதிக்கவே நாம் வேலைக்கு செல்கிறோம். ஆனாலும், பணப் பற்றாக்குறை. அப்பற்றாக்குறை பணத்தினை சம்பாதிக்கவே இணைய வேலையை வீட்டிலிருந்தபடியே பார்ட் டைமாக செய்ய விரும்புகிறோம், அதில் கை நிறைய பணமும் சம்பாதிக்கலாம். மேலும், இணைய வேலை என்பதனால் சவுகரியமும் அதிகம். பெண்களுக்கும் வேலைக்குச் செல்வோர்க்கும் என இல்லாமல் அனைவருக்கும் உகந்த பணி ஆன்லைன் ஜாப். அதுவும் House wife மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் உகந்தது ஆன்லைன் ஜாப்.

ஆன்லைன் ஜாப் பணியின் சிறப்பு:
1. நமக்கென்ற ஒர் முதலாளி கிடையாது, செய்யும் பணிக்கு நாமே முதலாளி.

2. இந்த டைமுக்கு வேலைக்கு வரவேண்டும் என சொல்ல எவருக்கும் அதிகாரம் இல்லை. 24 மணி நேரத்தில் நாம் விரும்பும் நேரம் பணி செய்யலாம், விரும்பும் நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்ளலாம். அதுவே இணைய பணியின் சிறப்பு.

3. நீ இந்த பணியைத்தான் செய்ய வேண்டும் என எவரும் நிர்பந்திப்பதும் இல்லை. தனக்கு பிடித்த தெரிந்த வேலையை செய்யலாம்.

4. மாதம் இவ்வளவுதான் சம்பளம் என்ற ஒர் கடிவாளமே கிடையாது. நம் திறமை கொண்டு எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆம், மாதம் ஒர் இலட்சம் கூட சம்பாதித்துக் கொள்ளலாம்.

5. இப்பணிக்காக நாம் ஒன்றும் பெரிய பட்டப்படிப்போ, கணிணிப் படிப்போ படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அடிப்படை பள்ளிக் கல்வியான 10 ம் வகுப்பு தேர்வு பெற்றிருந்தால் போதும். கூடவே ப்ரவுசிங்க் அறிந்திருந்தால் போதுமானது. அதுவும் தமிழில் தான் நாம் பணி செய்யப்போகிறோம்.

Tuesday, August 20, 2013

சாய் பாபா

வணங்குங்கள் சாய் பாபா


நடிகர் தல அஜித்குமார் வரலாறு

தல' யோட வரலாறு



சூப்பர் ஸ்டார் ரஜினியை எப்படி சின்ன வயசு பிள்ளைகளுக்கும், வயசான பிள்ளைகளுக்கும் பிடிக்குமோ அது போல.....
நம்ம தல அவர்களையும்..... சினிமா உலகத்தையும் தாண்டி பொதுவா எல்லாருக்கும் பிடிக்கும். அதுவும் வாழ்க்கையில் வரிசையா கஷ்டங்களையே அனுபவிச்சுக்கிட்டு அப்பப்போ வெற்றிகளை ருசிக்கும், எவரோட உதவியும் இல்லாம, எந்த பின்புலமும் இல்லாம, தன் சுய முயற்சியால் வாழ்க்கையை அனுபவித்து வாழும் ஆளுங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்
அதுக்கு காரணம் அவரோட நேர்மை, நாணயம், தன்னம்பிக்கை, தோல்வியில துவண்டு விடாத வெற்றியில் மயங்கி விடாத பக்குவம், சுய விளம்பரம் இல்லாமல் செய்யும் பல வகையான உதவிகள், ....இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.
பிறப்பு & வளர்ப்பும் :
1971 ல் மே 1 ந்தேதி ஆந்திராவில் உள்ள செகந்திராபாத்தில் பிறந்தார். தல யோட அப்பா கேரளாவை சேர்ந்த ஒரு தமிழ் பிராமணன். தல யோட அம்மா சிந்தி இனத்தை சேர்ந்தவங்க.
ஆந்திராவில் பிறந்தாலும்...தல படிச்சதெல்லாம் சென்னையில உள்ள ஒரு பள்ளியில்தான்.....மேல் படிப்பு?(+2) வரைக்கும் எப்படியோ சமாளிச்சவரால அதுக்கு மேல விருப்பம் இல்லாம அவரோட அடிமனசில் இருந்த பைக் மற்றும் கார் மேல ஆசையினால.....படிப்பை பாதியிலேயே விட்டுட்டு ஒரு வொர்க் ஷாப்புல மெக்கானிக்கா சேர்ந்து தன்னோட வாழ்க்கை போராட்டத்தை தொடங்குறார்.
அந்த மெக்கானிக் வேலையின் மூலமா.....பைக் ஓட்டுவதிலும் நல்லத் தேர்ச்சி பெற்று.....ஓட்டுனர் உரிமமும் வாங்கிக்கறார். சில நண்பர்களோட சேர்ந்து அப்பப்போ பைக் ரேஸ்- ல் கலந்துக்குறார். இப்படி ஒரு பைக் ரேஸ் -ல் தான் முதல் முதலா ஒரு விபத்துல சிக்கி சின்னாபின்னாமாகிருக்கார்.
அத்தகைய விபத்துக்குப் பின் மெல்ல மெல்ல உடல் தேறி ஒரு கார்மெண்ட்ஸ் ஏற்றுமதி நிறுவனத்துல மேர்ச்சண்டைசர் வேலைக்கு போக தொடங்குகிறார். வேலைக்கு போயிட்டு இருந்தாலும்.....அவரோட பைக் மற்றும் கார் மீதான காதல் குறையவே இல்லை, சின்ன சின்னதா தன் நண்பர்கள் குழு நடத்தும் போட்டிகளிலும் கலந்துக்குறார். தன்னோட சம்பள பணத்துல தன் நண்பர்களுக்கும் உதவிகள் பல செய்து....தன்னோட உதவும் குணமும் குறையாம பாத்துக்கிறார்.
சினிமா முயற்சி:
மேலும்.. ரொம்ப செலவு பிடிக்கும் தன்னோட ஆசையான பைக்/கார் ரேஸுக்கு தேவையான பணத்துக்காக சில நண்பர்கள் சொன்ன ஆலோசனையின் படி டிவி விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு தேட ஆரம்பிக்குறார். சில பல கஷ்டங்களுக்கும் வேதனைகளுக்கும் பிறகு ஒரு நல்ல திருப்பமா, ஒரு விளம்பரம் நிறுவனம்....தன்னோட விளம்பர படத்துல நடிக்க தல-க்கு வாய்ப்பு கொடுக்குது.
விளம்பரங்களில் நடிச்சுக்கிட்டு இருக்கும் போதே.......சினிமாவில் நடிக்கவும் தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கார். அவரோட தொடர் முயற்சியின் விளைவாக ஒரு தெலுங்கு படத்துல நடிக்க வாய்ப்பு கிடைக்குது. அப்போ தல க்கு வயசு 20. தல யோட போதாத நேரம் படத்துக்கான சூட்டிங் தொடங்கப் பட்ட கொஞ்ச நாளிலேயே அந்த தெலுங்கு படத்தோட இயக்குனர் எதிர்பாராத விதமா இறந்துட்டதால....அந்த படமே கைவிடப்படுது.
திரும்பவும் முதலிருந்தே.....வாய்ப்புகளை தேடி ஓடி...தொடர்ந்து முயற்சித்து....மீண்டும் ஒரு தெலுங்கு படத்துக்கான வாய்ப்பை பெறுகிறார். அந்த படத்தோட பேரு பிரேம புஸ்தகம்..., பிரேம புஸ்தகம் 1992 ல் வெளியான சின்ன பட்ஜெட்டில் உருவான தல யோட முதல் தெலுங்கு படம்...., தல யோட நேரடி கடைசி தெலுங்கு படமும் அதுதான்.
'தல' யோட வரலாறு -2
தமிழ் சினிமாவில் தல :
பிரேம புஸ்தகம் (1992) எனும் தெலுங்கு படத்துக்கு பின்னர், தெலுங்கு திரை உலகத்துக்கிட்ட நேனு ஒஸ்தாவா ன்னு செப்பிட்டு.....பஸ் ஏறி நம்ம தல வந்து சேரும் இடம்தான் கோடம்பாக்கம்.
கோடம்பாக்கத்துல வந்ததும் வாய்ப்பு கிடைச்சுடுமா என்ன?
கோடம்பாக்கத்து கதவை முட்டு முட்டுன்னு முட்டியதுக்கு பின்ன கிடைச்ச வாய்ப்புதான் அமராவதி(1993). அமராவதியின் இயக்குனர் செல்வா. இந்த பட வாய்ப்பை அஜித்துக்கு வாங்கி கொடுத்தது யார் தெரியுமா?
பாடும் நிலா பாலு என நம்மால் அன்போடு அழைக்கப்படும் திரு எஸ்.பி. பாலசுப்ரமனியம். இந்த படத்துக்கு இசை பால பாரதி, இதுல நடிச்ச முக்கியமான நடிகர்கள் நாசர், தலைவாசல் விஜய் மற்றும் சார்லி.
இந்த படத்துல நம்ம தல க்கு பின்னணி குரல் கொடுத்தது தற்போதைய முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம். ஆமாம் ஏன் விக்ரம் குரல் கொடுத்தா? படிச்சுக்கிட்டே முன்னால போங்க சொல்றேன். அமராவதி படம்....ஹிரோயின் புண்ணியத்துல ஓரளவுக்கு ஓடி அஜித்துக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்துச்சு.
அமராவதி படத்தின் ஹீரோயின் சங்கவி, பல நடிகர்கள் முன்னனி நடிகர்களாக வரதுக்கு சங்கவியும் ஒரு காரனம். அது போல அஜித்தின் அமராவதி படம் பேசப்பட்டதுக்கு சங்கவியின் தாராள நடிப்பும் காரனமா இருந்தாலும் தல க்கு அமராவதி படம் ஒரு தமிழ் சினிமாவுல நல்ல தொடக்கத்தை கொடுத்த படம். ஆனால்…..தலக்கு அதெல்லாம் முக்கியம் இல்லை. தலயோட மனசு எப்பவும் பைக் மேலதான்.
படத்துல நடிச்சு அந்த படம் சூட்டிங் முடிஞ்சு பணம் கிடைச்ச உடனே......நம்ம தல தேடியது எங்கடா பைக் ரேஸ் நடக்குதுன்னுதான்......அப்படி தேடி போய்...அங்க நடந்த பைக் ரேஸ்-க்கான பயிற்சியில் கலந்துக்கும் போது, தல க்கு தெரியலை தனக்கு ரெண்டு வருஷத்துக்கு படுக்கையில் ஓய்வு எடுக்க போறோம்கிறது.
ஆமாம், அந்த பைக் ரேஸ்-ல் நடந்த விபத்துல சிக்கி திரும்பவும் மருத்துவமனை வாசம், ஆனால் இந்த தடவை சாதாரண அடி இல்லை அது மரண அடி.......
அமராவதி படத்துக்கு டப்பிங் பேசவேண்டிய அஜித், விபத்துல சிக்கி மருத்துவமனையில இருந்ததால, விக்ரமுக்கு கிடைச்ச வாய்ப்பு தான் அமராவதி படத்துல தல க்கு பின்னனி குரல் விக்ரம்.
மரண அடியில் இருந்து காப்பாத்த, தல க்கு பண்ண பட்டது மூனு அறுவை சிகிச்சைகள்...ஆம் .....உயிரை காப்பாத்த உயிர் போகும் அளவுக்கு வலி கொண்ட மூனு அறுவை சிகிச்சைகள்...இந்த சம்பவம் நடந்த ஆண்டு 1993.
மரண அடியை வாங்கிய பின்னும் அஜித்துக்கு பைக்/கார் ரேஸ் மேல இருந்த காதல் கொஞ்சம் கூட குறையலங்கிறது மிகப்பெரிய ஆச்சர்யம் தானே...
விடா முயற்சியோடு.....தன்னம்பிக்கைய இழக்காத ஹிரோக்களை தமிழ் சினிமாவில் நிறையவே பாத்துருக்கோம்......அந்த வகையில வர நிஜமான ஹிரோ நம்ம தல தான்.
தல யோட ஒன்றரை வருஷ மருத்துவ மனை சிகிச்சைகள் முடிந்து......தேடப்பட்ட வாய்ப்பில் கிடைச்சது.......ஒரு செகன்ட் ஹிரோ வாய்ப்பு.., அந்த படத்தோட பேரு பாச மலர்கள், படத்தோட ஹிரோ அரவிந்தசாமி.
பாச மலர்கள் படம் நடிக்கும் போதே கிடைச்ச இன்னொரு வாய்ப்பு.....இப்பவும் தலக்கு பேர் சொல்லும் படங்களில் ஒன்னான பவித்ரா(1994).
படத்தோட இயக்குநர் கே.சுபாஷ், ஹீரோயின் கீர்த்தனா, மேலும் நாசர், வடிவேலு, எஸ்.எஸ்.சந்திரன், கோவை சரளா போன்ற முக்கியமான நடிகர்களும் நடிச்சுருந்தாங்க, பவித்ரா படத்தோட லீடிங் ரோல் என்னவோ ராதிகாவுக்குதான்....ஆனால், அதுல தல யோட நடிப்பு எனக்கு ரொம்ப புடிக்கும்.
இந்த படத்துக்கு இன்னொரு பிளஸ் இருக்கு அது? இசை ஏ.ஆர்.ரகுமான். இந்த படத்துல வந்த பாடலான செவ்வானம்….. சின்ன……எனும் தொடங்கும் பாடல் மிகவும் சிறந்த பாடல்களில் ஒன்னு. இந்த படம் வந்தப்ப…..எங்க பக்கத்து வீட்டு அக்காங்களுக்கு எல்லாம் இந்த பாட்டுன்னா உயிர். இந்த பாடலுக்கான பல்லவியை பாடுனது பாலு, பாட்டு மொத்தத்தையும் பாடுனது மனோ.
இந்த படத்துல வந்த உயிரும் நீயே எனும் பாடலை பாடிய உன்னி கிருஷ்னனுக்கு தேசிய விருது கிடைச்சது. இந்த படத்தின் பாடல்களை எழுதிய வைரமுத்துக்கும் தேசிய விருது கிடைச்சது. தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருதும் இந்த படத்துக்கு கிடைச்சது.
நம்ம தல தன்னோட பல பேட்டிகளிலும், தன்னோட வாழ்க்கையில திருப்பு முனைய ஏற்படுத்தியது இந்த பவித்ரா படம்தான்னு சொல்லியிருக்கார்.


தல (அஜீத் ) வரலாறு -3

 தல ஆட்டம் ஆரம்பம்:



1994 -ல் பவித்ரா படத்துக்கு பின்னர், ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட்...ஒரு முன்னணி நடிகருடன்.., அந்த முன்னணி நடிகர் யாருன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். ஆமாம் அவரேதான் இளைய தளபதி விஜய். அந்த படம்தான் ராஜாவின் பார்வையிலே... இந்த படம் வெளிவந்த ஆண்டு 1995.

பவித்ரா படத்துல அஜித்தோட நடிப்பும் கேரக்டரும் எனக்கு ரொம்ப பிடிக்குமுன்னு போன பதிவுலேயே சொல்லியிருந்தேன். எனக்கு பிடிச்ச மாதிரியே இன்னும் முக்கியமான ஒருத்தருக்கு பிடிச்சுருந்துது. அவர் யார்? அவருதான் இயக்குனர் வசந்த்.

இந்த ஆசை பட வாய்ப்பு முதலில் போனது சூர்யாவுக்குதான், ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அந்த வாய்ப்பை சூர்யா நிராகரிக்க..., என்ன பன்றதுன்னு யோசிச்ச வசந்துக்கு பவித்ரா படம் கண்ணில் பட, அந்த படத்துல அஜித்தோட பெர்பார்மன்ஸ் பிடிச்சு போக.....அஜீத்துதான் ஆசை படத்தோட ஹீரோன்னு முடிவு பண்ணிட்டாங்க.

பவித்ரா படம் வரைக்கும் தல ஒரு நல்ல நடிகருன்னு அறியப்பட்டாலும், கமர்சியல் வெற்றி தல யோட கையில கிடைச்சது ஆசை படத்துக்குதான்.

தல க்கு மட்டும் இல்லை, இந்த படம் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனைய தந்துச்சு. கல்லுரி கூட்டம் பெருமளவு தல க்கு ரசிகர்கள் ஆனதும் இந்த படத்துனாலத்தான்.

ஆசை படத்தோட ஹீரோயின் கல்கத்தா ரசகுல்லா சுவலட்சுமி..., தன்னோட மொத்த அழகையும் கூடவே ஓரளவுக்கு கவர்ச்சியையும் காமிச்ச சுவலட்சுமிக்கும், வில்லனா நடிச்சு பட்டைய கிளப்பி ஏகப்பட்ட தாய்மார்களிடம் திட்டு வாங்கிகிட்ட பிரகாஷ் ராஜுக்கும், வடிவேலு போன்ற நடிகர்களுக்கும் மிகப்பெரிய திருப்பு முனைய தந்த படம்.

ஆசை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது போலவே, தமிழக அரசின் விருதுகளையும் பெற்று தந்தது. வசந்துக்கு சிறந்த இயக்குனர் விருது, தேவாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது, கொஞ்ச நாள் பொறு தலைவா பாடலை பாடிய ஹர்ஹரனுக்கு சிறந்த பின்னணி பாடகர் விருது போன்றவை முக்கியமான விருதுகள்.

ஆசை படத்தோட தயாரிப்பாளர் இயக்குனர் மணிரத்னம், தன்னோட சிஷ்யன் வசந்த் மேல இருந்த நம்பிக்கையில் மணிரத்னம் தயாரிச்ச படம்.., வசந்தும்..மிகப்பெரிய வெற்றியை கொடுத்து தன் குருநாதர் தான் மேல வச்சுருந்த நம்பிக்கைய காப்பாத்திக்கிட்ட படம்.

ஆசை படத்தோட பாடல்கள் எல்லாமே மிகசிறந்த பாடல்கள். பாடல்கள் படத்துக்கு பெரிய பிளஸ். இன்னைக்கும் அலுக்காம கேக்க கூடிய பாடல்கள்.

ஆசை படத்தோட ஒளிப்பதிவு ஜீவா....மிக சிறந்த ஒளிப்பதிவு. படத்துல அஜீத் கேரக்டர் பேரு கூட ஜீவாதான். ஆசை படம் வெளிவந்த ஆண்டு 1995.

ஆசை படத்துக்கு பின் இயக்குனர் அகத்தியன் இயக்கத்துல அஜீத் நடிச்சப்படம் வான்மதி. வான்மதி படத்தோட வெற்றிக்கு பாடுப்பட்டவங்களில் ஒருத்தவங்க நடிகை சுவாதி. சுவாதியோட தரிசனம் படத்துக்கு மிகப்பெரிய வெற்றியையும் பப்ளிசிட்டியையும் தேடி தந்ததுன்னு சொன்னா அது மிகை இல்லை. இந்த படத்துக்கு இசை தேவா , ஒளிப்பதிவு தங்கர்பச்சான். அகத்தியனின் ஆஸ்தான நடிகர்களான பாண்டு, தாமு போன்றவர்களும் நடிச்சு வந்த படம். படத்தோட பாடல்களும் நல்ல பாடல்கள். இந்த படம் வெளிவந்த ஆண்டு 1996.

வெற்றி படத்தை கொடுத்த பின்னும்..நம்ம தல க்கு தலைக்கனம் இல்லைங்கிரதுக்கு உதாரணம் தான்....முன்னணி நடிகர் பிரசாந்துடன் இணைந்து நடித்த கல்லூரி வாசல். கல்லூரி வாசல் திரைப்படத்தை என்னால மறக்கவே முடியாது..அந்த படம் பாக்கும் வாய்ப்பும் யாரு கூட பாத்ததுங்கிறதும்..... சரி விடுங்க அது என்னோட சொந்த கதை சோக கதை.

கல்லுரி வாசல் படத்துல வந்த....என் மனதை....., லயோலா காலேஜ் லைலா, கிஸ் மீ மிஸ் எனும் பாடல்கள் சிறந்த பாடல்கள். படத்துக்கு இசை தேவா.

அந்த காலகட்டத்துல வந்த நல்ல படம் தான் கல்லுரி வாசல், ஆனால் புரிஞ்சுதா புரியலையா? ஒடுனுச்சா ஓடலையா? அப்படின்னு சொல்ல முடியாத அளவுக்கு ரொம்ப குழப்பம். ஆனாலும் தல க்கு இதுவும் ஒரு டீசண்டான காதல் & நல்ல நட்பு கலந்த சிறந்த படம்தான். இந்த படமும் வெளிவந்த ஆண்டு 1996.
    

1995 ல் செமையான ஹிட் படமான ஆசைக்கு பின்ன 1996 வந்துருச்சு ....1996 ல் மொத்தம் 4 படம். அதுல வான்மதி, கல்லுரி வாசல் படத்துக்கு பின்னர் மூனாவதா வந்த படம் மைனர் மாப்பிள்ளை. இதுவும் ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுதான்...
இன்னொரு ஹீரோவா ரஞ்சித் நடிச்சுருந்தார். ஹீரோயினா சுபாஸ்ரீ, கீர்த்தனா நடிச்சுருந்தாங்க..
இதெல்லாம் ஒரு படமான்னு யாரும் கேக்க கூடாது. அப்ப இருந்த ட்ரெண்டுக்கு....அது காமெடியை மையமா வச்சு வந்த படம்.
இதுவரைக்கும் சுமாரா போன தலயோட வாழ்க்கையில்.... சினிமாவுல மிகப்பெரிய முன்னேற்றத்தையும் ....சொந்த வாழ்க்கையில மிகப்பெரிய தடுமாற்றத்தையும் கொடுத்தது. 1996 ன் கடைசி காலக்கட்டத்தில் வெளிவந்த தல யோட தமிழின் 10 வது (1996-ல் 4 வது ) படமான காதல் கோட்டை ....
காதல் கோட்டை படத்தை பத்தி நான் சொல்லவே வேண்டியதில்லை., தல ரசிகர்களுக்கு மாத்திரம் இல்லாம....தமிழ் சினிமாவுக்கே ட்ரென்ட் செட்டர் படம் என்பதால எல்லாருக்குமே தெரியும். என்னை பொறுத்த வரைக்கும் அஜித்தை தவிர வேற யார் இந்த படத்துல நடிச்சுருந்தாளும் படத்தோட கதையே வேற மாதிரி ஆயிருக்கும். அந்த சூர்யா கேரக்டருக்கான இயல்பு வேற யாருக்கும் வராது..
ஒரு விதத்துல பாத்தா தல யோட நிஜமான கேரக்டருக்கும் அந்த படத்தோட சூர்யா எனும் அவரோட கேரக்டருக்கும் நிறைய ஒற்றுமை தெரியும். இந்த படம் அகத்தியன் இயக்கத்துலயும், தேவயாணி மற்றும் ஹீரா நடிப்புலயும் வந்த படம்..தேவயானிக்கும் ஒரு மறு வாழ்வை கொடுத்த படம் தான் காதல் கோட்டை.
படத்தோட பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட்டு. நலம் நலமறிய ஆவல், சிவப்பு லோலாக்கு, வெள்ளரிக்கா, கவலை படாதே, எல்லாம் அருமையான பாடல்கள். அருமையான திரைக்கதை, இயக்குனர் அகத்தியனுக்கு தேசிய விருதையும் வாங்கி கொடுத்தது. தேவயானிக்கும் சிறந்த நடிக்கைக்கான ஸ்பெசல் விருது கிடைச்சுது.
காதல் கோட்டை படம் இந்தியிளையும் ரீமேக் செய்ய பட்டது. சமிபத்துல....அதாவது 2010 ல் காதல் கோட்டை படத்தின் கதை ஒரு நாவாலாகவும் வெளிவந்துருக்குன்னா அந்த படத்துக்கான வரவேற்பு இத்தனை வருஷத்துக்கு பின்னரும் எப்படி இருக்குன்னு பாத்துக்கங்க. இந்த வரவேற்புக்கு நம்ம தலயும் ஒரு காரனங்கிரத மறுக்க முடியுமா?
நிறைய நல்ல பேரை வாங்கி கொடுத்த அதே காதல் கோட்டை படம் தான் அஜித்துக்கும் ஹீராவுக்கும் காதலுன்னு கொஞ்சம் என்ன நிறைய கிசு கிசுவையும் கிளப்பி விட்டுச்சு. அந்த கிசு கிசுவுல முக்காவாசி என்ன முழுசுமே உண்மையாத்தான் இருக்கணும்.
ஒரு ஹீரோ.... நேர்மை...அழகு ....உண்மை.....இன்னும் பல பல இத்யாதிகளை தகுதியா வச்சுருந்தா எந்த பொண்ணுக்குதான் பிடிக்காது. அது போல ஹீராவும் அழகுதான், சைக்காலஜி படிச்ச பொண்ணு..., ஒரே படத்துல சேர்ந்து நடிக்கும் போது....இது போல காதல் வருவதும் சகஜம் தானே. மேலும் கல்யாணம் பண்ணிக்க காதல் கோட்டை தேவயாணி மாதிரி பொண்ணு கேக்கும், காதலிக்க ஹீரா மாதிரி பொண்ணு வேணுமுன்னு கேக்கற ஆட்கள் தானே நாம்.
அது போல எல்லா ஆண்களுக்கும் தங்கள் முதல் காதல் வெற்றியடையுமுன்னு சொல்ல முடியாது இல்லையா?, அதற்கு பல சொந்த காரணமும் இருக்கலாம்.
இப்படி...கிசு கிசு, காதல், மிகப்பெரிய வெற்றின்னு...நம்ம தலக்கு பேர் வாங்கி கொடுத்த படம் தான் காதல் கோட்டை. ஆக மொத்தத்துல 1996 ம் ஆண்டும், அந்த ஆண்டுல வந்த காதல் கோட்டை படமும் மிக சிறந்த நிலையை நம்ம தல க்கு கொடுத்ததுன்னு சொல்லலாம்.



எனக்கு நண்பனாக இருக்க எந்த தகுதியும் வேண்டாம்…, ஆனால் எதிரியாக இருக்க தகுதி வேணும்… டேவிட் பில்லா

என்ன நடந்தாலும், எதை இழந்தாலும், சோர்ந்து போக மாட்டேன்….காரணம்? நான்…100 வெற்றிகளை பார்த்தவன் அல்ல…, 1000 தோல்விகளை பார்த்தவன்…..தல.

1997 ல் வந்த தலயோட 5எல்லா படங்களும் கமர்ஷியலா தோல்விதான்னு போன பதிவுல சொல்லியிருந்தேன்…, அதே..வருஷத்துல தல தன்னோட சொந்த டிஸ்டிரிபூட் கம்பெனி மூலமா……சில படங்களை வாங்கி டிஸ்டிரிபூட் பன்னினார்……அந்த படங்களும் கூட தல யோட காசை காலி பன்னுச்சு.

மேலும் தன்னோட உடல்நிலை மோசமடைந்து தனக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கான பணத்துக்கு கூட ரொம்ப கஷ்டப்பட்ட காலக்கட்டம். அதற்கு பின்னதான்…….1998 ல் காதல் மன்னன் படம்.


காதல் மன்னன் எனும் சூப்பர் படத்துக்கு பின்ன தல நடிச்ச படம் அவள் வருவாளா…, இந்த படத்துக்கு முன்னாடி அஜீத்துக்கு வந்த வாய்ப்பு நேருக்கு நேர் எனும் படம். ஆசை படத்த எடுத்த இயக்குநர் வசந்தின் படம்.

சில காரனத்தால அஜீத் அந்த படத்த நிராகரிக்க…….அதுல சூர்யா நடிச்சுருந்தார். சூர்யா நடிக்க வேண்டிய ஆசை படத்துல அஜீத் நடிச்சு பட்டைய கிளப்ப., அஜீத் நடிக்க வேண்டிய படத்துல சூர்யா நடிச்சு?… சரி... ஓரளவுக்கு நல்லாவும் செஞ்சுருந்தார். சூர்யா சரியா நடிக்க முடியாததுக்கு காரனம்?

நேருக்கு நேர் படத்துல……..சூர்யாவுக்கும் விஜய்க்கும் ஏகப்பட்ட ஹைட் வித்தியாசம் இருந்ததால……….ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் ரொம்ப சிரம பட்டாராம்., சூர்யாவும் ஏதோ பேட் எல்லாம் வச்சு ரொம்ப சிரமப்பட்டாராம. சரி விடுங்க நம்ம தல யைப் பத்தி மட்டும் பாப்போம்.


இதுபோல அஜீத் நடிக்காம நிராகரிச்ச படங்கள் நிறைய இருக்கு. இப்ப யோசிச்சு பாத்தாஅந்த படங்களில் தல நடிக்காதது ஒரு விதத்துல நல்லதாகவும் ஒரு விதத்துல ஏமாற்றமாகவும் இருக்கும். ஆனால் நேருக்கு நேர் படத்துல தல நடிக்காதது நல்லதுன்னுதான் நினைக்கிறேன்.


தல நடிக்க முடியாம போன இன்னொருப் படம் நான் கடவுள், இந்த படத்துலயும் தல நடிக்காம போனது நல்லதுதான். பின்ன தல நடிச்சுருக்கலாமோன்னு….ஏங்க வைக்கும் ஒரு படம்……கவுத மேனனின் காக்க காக்க..,


காக்க காக்க படத்துக்கு முதலில் அஜீத்ததான் இயக்குனர் கவுத மேனன் தொடர்பு கொண்டார். ஆனால் தல யால அந்த படத்துல நடிக்க முடியலை. பின்னதான் அதுல சூர்யா நடிச்சு வெளிவந்துச்சு.

அவள் வருவாளா…..வித்தியாசமான காதல் கதை, முற்போக்கான கதை, கொஞ்சம் ரூட் மாறினாலும்……விரசமாக கூடிய கதை. தல யோட டீசண்டான நடிப்பாலும், சிம்ரனின் பக்காவான நடிப்பு மற்றும் கேரக்டர், கவுண்டமனி, செந்தில், கோவை சரளா..போன்றவர்களின் குணச்சித்திரம் கலந்த காமெடி., பின்ன பிரித்விராஜின் சைக்கோத்தனம் கலந்த கேரக்டர பாக்கும் போது கொஞ்சம் ஓவர் ஆக்டிங் மாதிரி தோனும், ஆனால்…அவர் அப்படி நடிச்சதுதான் அஜீத் கேரக்டர் மேலயும் சிம்ரன் கேரக்டர் மேலயும் ரசிகர்களுக்கு கூடுதலான அனுதாபம் கிடைக்க காரனாமாக இருந்துச்சு.

இந்த படத்தோட இயக்குநர் ராஜ் கபூர், இப்பல்லாம் ராஜ் கபூர் இயக்கத்தை மறந்து ரொம்ப நாளாயிடுச்சு. இசை….எஸ்.ஏ. ராஜ்குமார். பாடல்கள் ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதம்…..இது காதலின் சங்கீதம்……லல..லா, அவரோட ஸ்பெசல் கோரஸை வச்சு..ஜெயசந்திரன் குரலில் பட்டைய கிளப்பியிருப்பார். பின்ன வந்தது பெண்ணா……, காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா…., சிம்ரனின் சூப்பர் ஹிட்டான சேலையில வீடு கட்டவா எல்லாம் இப்போதும் எனக்கு பிடித்தமான, நிறைய சமயங்களில் முனுமுனுக்கும் பாடல்கள்.

அவள் வருவாளாவுக்கு அடுத்ததா……இயக்குநர் விக்ரமனுக்குகாக சிறப்பு தோற்றத்தில் தல நடிச்சு கொடுத்த….உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். இந்த படம் உருவாகும் போது அஜீத்துக்கு படம் முழுவதும் வருகிற மாதிரியான முக்கியமான கேரக்டருதான்…..ஆனால் படம் எடுக்க போகும் போது இயக்குநர் விக்ரமன் தன்னோட கதையில் செய்த மாற்றங்களினால் அஜீத் கேரக்டர் ரொம்ப சுருங்கிடுச்சு, ஆனாலும் பெருந்தன்மையா தல நடிச்சு கொடுத்தார்.


அஜீத்தோட பெருந்தன்மையை கண்டு சந்தோஷப்பட்ட உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தின் நாயகன் கார்த்திக்….,அஜித்துக்காக சிறப்பு தோற்றத்தில வந்து ஒரு படத்துல நடிச்சு கொடுத்தார்……அந்த படம்தான் ஆனந்த பூங்காற்றே….. பலனை எதிர்பாராமல் செய்த உதவிக்கு நடிகர் கார்த்திக் தந்த கவுரவம்.

இந்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படம் கூட இளைய தளபதி விஜய் நடிக்க வேண்டிய படம்…..விஜய் நடிக்க லேட்டானப்போதான் கதையும் மாறி, அஜீத்தின் கேரக்டரும் மாற்றப்பட்டு கார்த்திக் நடிச்சுருந்தார். ரோஜா நடிச்ச கேரக்டரில் மீனா நடிக்க வேண்டியது……மீனா அப்போ ரொம்ப பிஸியாக இருந்ததால ரோஜா நடிச்சுருந்தாங்க……

எப்படியிருந்தாலும் அஜீத்துக்கு பேர் சொல்லும் படம்தான் உன்னிடத்தில என்னை கொடுத்தேன்…, பின்ன அஜீத்தின் நடிப்பில் வெளிவந்ததுதான் உயிரோடு உயிராக….


உயீரோடு உயிராக………..ரொம்ப சோகம் நிரம்பிய கேரக்டரில் அஜீத், பெண் இயக்குநர் சுஷ்மாவின் இயக்கம், சுஷ்மாவின் மகள் ரிச்சா ஹீரோயின். இசை….வித்யாசாகர்.


வித்யாசாகரின் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் சிறந்த பாடல்கள். ஐ லவ் யூ…., பூவுக்கெல்லாம், அன்பே…, எனும் மூன்றும் மிக சிறந்த பாடல்கள். சரத்பாபு மற்றும் ஸ்ரீவித்யாவின் ஓவர் ஆக்டிங்குதான் படத்தோட பெரிய மைனஸ் என்று நான் நினைக்கிறேன். சரியான விளம்பரம் இல்லாததுதான் படத்துக்கு பெரிய மைனஸ் என்று இயக்குநர் சுஷ்மா சொல்லியிருந்தாங்க…


அது எப்படியோ… இந்த படம் தோல்வின்னு சொல்ல முடியாது……ஒரு ஆவெரெஜ் படமுன்னு சொல்லலாம். பொதுவா பாத்தா... 1998 ம் வருஷம் நம்ம தல க்கு சூப்பரான வருஷம்தான்.....
இப்ப நம்ம தல ஆட்டம் ஆரம்பனம் ஆகியாச்சு  வீரம் கொடிகட்டி பரக்க போராரு.................... 
 
தல டக்கருடா..........................................