எனக்கு
நண்பனாக இருக்க எந்த தகுதியும் வேண்டாம்…, ஆனால் எதிரியாக இருக்க தகுதி வேணும்…
டேவிட் பில்லா
என்ன
நடந்தாலும், எதை இழந்தாலும், சோர்ந்து போக மாட்டேன்….காரணம்? நான்…100 வெற்றிகளை
பார்த்தவன் அல்ல…, 1000 தோல்விகளை பார்த்தவன்…..தல.
1997
ல் வந்த தலயோட 5எல்லா படங்களும் கமர்ஷியலா தோல்விதான்னு போன பதிவுல
சொல்லியிருந்தேன்…, அதே..வருஷத்துல தல தன்னோட சொந்த டிஸ்டிரிபூட் கம்பெனி
மூலமா……சில படங்களை வாங்கி டிஸ்டிரிபூட் பன்னினார்……அந்த படங்களும் கூட தல யோட காசை
காலி பன்னுச்சு.
மேலும்
தன்னோட உடல்நிலை மோசமடைந்து தனக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கான பணத்துக்கு கூட
ரொம்ப கஷ்டப்பட்ட காலக்கட்டம். அதற்கு பின்னதான்…….1998 ல் காதல் மன்னன் படம்.
காதல் மன்னன் எனும் சூப்பர் படத்துக்கு பின்ன தல நடிச்ச படம் அவள் வருவாளா…,
இந்த படத்துக்கு முன்னாடி அஜீத்துக்கு வந்த வாய்ப்பு நேருக்கு நேர் எனும் படம். ஆசை படத்த எடுத்த இயக்குநர் வசந்தின் படம்.
சில காரனத்தால அஜீத் அந்த படத்த நிராகரிக்க…….அதுல சூர்யா நடிச்சுருந்தார்.
சூர்யா நடிக்க வேண்டிய ஆசை படத்துல அஜீத் நடிச்சு பட்டைய கிளப்ப.,
அஜீத் நடிக்க வேண்டிய படத்துல சூர்யா நடிச்சு?…
சரி... ஓரளவுக்கு நல்லாவும் செஞ்சுருந்தார்.
சூர்யா சரியா நடிக்க முடியாததுக்கு காரனம்?
நேருக்கு நேர் படத்துல……..சூர்யாவுக்கும் விஜய்க்கும் ஏகப்பட்ட ஹைட் வித்தியாசம் இருந்ததால……….ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் ரொம்ப சிரம பட்டாராம்., சூர்யாவும் ஏதோ பேட் எல்லாம் வச்சு ரொம்ப சிரமப்பட்டாராம.
சரி விடுங்க நம்ம தல யைப் பத்தி மட்டும் பாப்போம்.
இதுபோல அஜீத் நடிக்காம நிராகரிச்ச படங்கள் நிறைய இருக்கு.
இப்ப யோசிச்சு பாத்தா…அந்த படங்களில் தல நடிக்காதது ஒரு விதத்துல நல்லதாகவும் ஒரு விதத்துல ஏமாற்றமாகவும் இருக்கும்.
ஆனால் நேருக்கு நேர் படத்துல தல நடிக்காதது நல்லதுன்னுதான் நினைக்கிறேன்.
தல நடிக்க முடியாம போன இன்னொருப் படம் நான் கடவுள்,
இந்த படத்துலயும் தல நடிக்காம போனது நல்லதுதான்.
பின்ன தல நடிச்சுருக்கலாமோன்னு….ஏங்க வைக்கும் ஒரு படம்……கவுத மேனனின் காக்க காக்க..,
காக்க காக்க படத்துக்கு முதலில் அஜீத்ததான் இயக்குனர் கவுத மேனன் தொடர்பு கொண்டார்.
ஆனால் தல யால அந்த படத்துல நடிக்க முடியலை.
பின்னதான் அதுல சூர்யா நடிச்சு வெளிவந்துச்சு.
அவள்
வருவாளா…..வித்தியாசமான காதல் கதை, முற்போக்கான கதை, கொஞ்சம் ரூட்
மாறினாலும்……விரசமாக கூடிய கதை. தல யோட டீசண்டான நடிப்பாலும், சிம்ரனின் பக்காவான
நடிப்பு மற்றும் கேரக்டர், கவுண்டமனி, செந்தில், கோவை சரளா..போன்றவர்களின்
குணச்சித்திரம் கலந்த காமெடி., பின்ன பிரித்விராஜின் சைக்கோத்தனம் கலந்த கேரக்டர
பாக்கும் போது கொஞ்சம் ஓவர் ஆக்டிங் மாதிரி தோனும், ஆனால்…அவர் அப்படி நடிச்சதுதான்
அஜீத் கேரக்டர் மேலயும் சிம்ரன் கேரக்டர் மேலயும் ரசிகர்களுக்கு கூடுதலான அனுதாபம்
கிடைக்க காரனாமாக இருந்துச்சு.
இந்த
படத்தோட இயக்குநர் ராஜ் கபூர், இப்பல்லாம் ராஜ் கபூர் இயக்கத்தை மறந்து ரொம்ப
நாளாயிடுச்சு. இசை….எஸ்.ஏ. ராஜ்குமார். பாடல்கள் ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதம்…..இது
காதலின் சங்கீதம்……லல..லா, அவரோட ஸ்பெசல் கோரஸை வச்சு..ஜெயசந்திரன் குரலில் பட்டைய
கிளப்பியிருப்பார். பின்ன வந்தது பெண்ணா……, காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா….,
சிம்ரனின் சூப்பர் ஹிட்டான சேலையில வீடு கட்டவா எல்லாம் இப்போதும் எனக்கு
பிடித்தமான, நிறைய சமயங்களில் முனுமுனுக்கும் பாடல்கள்.
அவள்
வருவாளாவுக்கு அடுத்ததா……இயக்குநர் விக்ரமனுக்குகாக சிறப்பு தோற்றத்தில் தல நடிச்சு
கொடுத்த….உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். இந்த படம் உருவாகும் போது அஜீத்துக்கு
படம் முழுவதும் வருகிற மாதிரியான முக்கியமான கேரக்டருதான்…..ஆனால் படம் எடுக்க
போகும் போது இயக்குநர் விக்ரமன் தன்னோட கதையில் செய்த மாற்றங்களினால் அஜீத்
கேரக்டர் ரொம்ப சுருங்கிடுச்சு, ஆனாலும் பெருந்தன்மையா தல நடிச்சு கொடுத்தார்.
அஜீத்தோட
பெருந்தன்மையை கண்டு சந்தோஷப்பட்ட உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தின் நாயகன்
கார்த்திக்….,அஜித்துக்காக சிறப்பு தோற்றத்தில வந்து ஒரு படத்துல நடிச்சு
கொடுத்தார்……அந்த படம்தான் ஆனந்த பூங்காற்றே….. பலனை எதிர்பாராமல் செய்த உதவிக்கு
நடிகர் கார்த்திக் தந்த கவுரவம்.
இந்த
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படம் கூட இளைய தளபதி விஜய் நடிக்க வேண்டிய
படம்…..விஜய் நடிக்க லேட்டானப்போதான் கதையும் மாறி, அஜீத்தின் கேரக்டரும்
மாற்றப்பட்டு கார்த்திக் நடிச்சுருந்தார். ரோஜா நடிச்ச கேரக்டரில் மீனா நடிக்க
வேண்டியது……மீனா அப்போ ரொம்ப பிஸியாக இருந்ததால ரோஜா
நடிச்சுருந்தாங்க……
எப்படியிருந்தாலும்
அஜீத்துக்கு பேர் சொல்லும் படம்தான் உன்னிடத்தில என்னை கொடுத்தேன்…, பின்ன
அஜீத்தின் நடிப்பில் வெளிவந்ததுதான் உயிரோடு உயிராக….
உயீரோடு
உயிராக………..ரொம்ப சோகம் நிரம்பிய கேரக்டரில் அஜீத், பெண் இயக்குநர் சுஷ்மாவின்
இயக்கம், சுஷ்மாவின் மகள் ரிச்சா ஹீரோயின்.
இசை….வித்யாசாகர்.
வித்யாசாகரின்
இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் சிறந்த பாடல்கள். ஐ லவ் யூ…., பூவுக்கெல்லாம்,
அன்பே…, எனும் மூன்றும் மிக சிறந்த பாடல்கள். சரத்பாபு மற்றும் ஸ்ரீவித்யாவின் ஓவர்
ஆக்டிங்குதான் படத்தோட பெரிய மைனஸ் என்று நான் நினைக்கிறேன். சரியான விளம்பரம்
இல்லாததுதான் படத்துக்கு பெரிய மைனஸ் என்று இயக்குநர் சுஷ்மா
சொல்லியிருந்தாங்க…
அது
எப்படியோ… இந்த படம் தோல்வின்னு சொல்ல முடியாது……ஒரு ஆவெரெஜ் படமுன்னு சொல்லலாம்.
பொதுவா பாத்தா... 1998 ம் வருஷம் நம்ம தல க்கு சூப்பரான வருஷம்தான்.....
இப்ப நம்ம தல ஆட்டம் ஆரம்பனம் ஆகியாச்சு வீரம் கொடிகட்டி பரக்க போராரு....................
தல டக்கருடா..........................................